மூன்று குழந்தைகளுக்கு சீனா பச்சை கொடி

(ஃபாஸ்ட் நியூஸ் | சீனா) – மூத்த குடிமக்கள், குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை குறைவு, வேலை செய்யும் நபர்களின் எண்ணிக்கை குறைவு காரணமாக சீனா இந்த முடிவை எடுத்துள்ளது.

உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக சீனா விளங்குகிறது. கம்யூனிசம் நாடான சீனா, தனக்கென தனி ராஜ்ஜியம் அமைத்துக் கொண்டு உலகின் முக்கிய நாடுகளில் ஒன்றாக திகழ வேண்டும் என விரும்பியது. அப்படி ஆக வேண்டுமென்றால், பொருாளாதாரத்தில் தலைசிறந்து உயர்ந்து நிற்க வேண்டும். அதற்கு மக்கள் தொகை மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது என்று கருதுதியது.

இதனால் ஒரு தம்பதிக்கு ஒரு குழந்தை என்ற கொள்கையை 1979-ம் ஆண்டு சீனா அமல்படுத்தியது. இந்த கொள்கையை கடுமையான வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டது. விதிமுறையை மீறினால் அபராதம், வேலை இழப்பு, வலுக்கட்டாயமாக கருக்கலைப்பு, கருத்தடை போன்றவற்றால் மக்களை கட்டுப்படுத்தியது.

தொழிற்சாலைகளை கட்டவும் இயக்கவும் தற்போதுள்ள பணியாளர்களைப் பயன்படுத்துவதால் மக்கள் தொகை கட்டுப்பாட்டு யுக்தி சீனாவுக்கு நன்றாக கைக்கொடுத்தது.