போதைப்பொருள் கடத்தல் மன்னன் சித்தீகிற்கு விளக்கமறியல் நீடிப்பு

மாபெரும் போதைபொருள் வர்த்தகரான மொஹமட் சித்தீக் எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
பாகிஸ்தானில் வைத்து கைது செய்யப்பட்ட இவர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு பணமோசடி சம்பந்தமான விசாரணைகள் இவரிடம் மேற்கொள்ளப்படுவதாக கடந்த 2ம் திகதி குற்றப்ப புலனாய்வுப் பிரிவினர் நிதிமன்றிற்குத் தெரிவித்திருந்தனர்.

அதன்படி சந்தேக நபரான சித்தீக் இன்றுவரை விளக்கமறியலலில் வைக்கப்பட்டிருந்தார்.

இன்று மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்தே அவர் மீண்டும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.