பாரிய அளவில் இலஞ்சம் பெற்றதாக நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட சுங்க அதிகாரிகள் மூவரும் இம்மாதம் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சுங்க அதிகாரி சுஜீவ பராகிரம ஜூனதாஸ, பிரதி சுங்க அதிகாரி ஜகத் குணதிலக, உதவி சுங்க அதிகாரி எம்.டீ.யூ.ஜீ. பெரேரா ஆகியோரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் மூவரும் இன்று(16) கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
125 மில்லியன் ரூபாய இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டில் நேற்றைய தினம் இவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டனர்.
இலங்கை வரலாற்றிலேயே அதிகளவாக பெறப்பட்ட இலஞ்சத் தொகை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.