சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் இலங்கை கடற்பரப்பில் பிரவேசிக்க அனுமதி – பிரதமர்

எதிர்காலத்தில் சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் இலங்கை கடற்பரப்பில் பிரவேசிக்க அனுமதி வழங்கப்படும் என, அரசாங்கம் தெரிவித்துள்ளது.

எது எவ்வாறாயினும் முன்னர் அறிவிக்கப்பட்ட பின்னர் இதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

எனினும் நிரந்தரமாக சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் இலங்கை கடற்பரப்பில் இருக்க முடியாது என, சிங்கப்பூருக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் அங்கு ஊடகங்களிடம் உரையாற்றிய போது தெரிவித்துள்ளார்.

நட்பு ரீதியாக வரும் கப்பல்கள் குறித்து, அண்டை நாடுகளுக்கு தகவல் தெரிவிக்கப்படும். கடந்த முறை, சீன நீர்மூழ்கி கப்பல் வந்தபோது, தனக்கு தெரிவிக்கவில்லை என, இந்தியா கூறியதும் குறிப்பிடத்தக்கது.

இதன் பின்பு, அனைத்து கப்பல்களின் வருகையும் இந்தியாவிற்கு தெரிவிக்கப்படும். சீனாவுடன் இலங்கை, நீண்ட காலமாக நல்லுறவு வைத்துள்ளது. இதை, இந்தியாவிற்கும் தெரிவித்துள்ளோம், என ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.