கேரளாவில் தலைதூக்கும் ‘ஸிகா’ வைரஸ்

(ஃபாஸ்ட் நியூஸ் |  கேரளா) – கேரளாவில் கர்ப்பிணி ஒருவருக்கு ஸிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

அறிகுறிகள் தென்பட்ட சுமார் 13 பேரின் இரத்த மாதிரிகள் புனேயில் உள்ள தேசிய கிருமியியல் ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அவர்களில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 24 வயது கர்ப்பிணிக்கு ஸிகா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

ஏடிஸ் கொசுக்கள் கடிப்பதால் ஸிகா வைரஸ் பரவுகிறது.காய்ச்சல், தோலில் சொறி, மூட்டு வலி, தலைவலி உள்ளிட்டவை ஸிகா வைரஸ் பாதிப்பின் அறிகுறிகளாகும்.

1947-ஆம் ஆண்டு உகாண்டா காடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட ஸிகா வைரஸுக்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.