(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) – இங்கிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள 23 பேர் கொண்ட இந்திய அணிக்குழாமில், ஒருவருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் இடம்பெற்ற, உலக டெஸ்ட சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்காக, இங்கிலாந்து சென்ற இந்திய அணியினர், இங்கிலாந்துடனான தொடரிலும் பங்கேற்பதற்காக அங்கு தங்கியுள்ளனர்.
இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ளது.
இந்நிலையில், கொவிட்-19 தொற்றுறுதியான ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.