உள்ளூராட்சி தேர்தலில் புதிய கூட்டணியின் கீழ் போட்டியிடுவதற்கு சேரும் பங்கு கட்சிகள்

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் புதிய கூட்டணியின் கீழ் போட்டியிடுவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 08 பங்கு கட்சிகளும் ஆயத்தமாகின்றது.

அதற்காக மேற்கொள்ளப்படுகின்ற கலந்துரையாடல்கள், இதுவரையில் இறுதி கட்டத்தையடைந்துள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

தேசிய சுதந்திர முன்னணி, பிவிதுரு ஹெல உறுமய, மக்கள் ஐக்கிய முன்னணி, தேச விமுக்தி ஜனதா கட்சி, சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஜனநாயக இடதுசாரி முன்னணி ஆகியவை ஒன்றாக இணைந்து செயற்பட்டு வருகின்றது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முக்கிய சில சிரேஷ்டர்களை புதிய கூட்டணியில் இணைத்து கொள்வதற்காக கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

எவ்வாறிருப்பினும், தான் அல்லது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஒருவரும் கட்சியை விட்டு செல்லப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்ஸா தெரிவித்துள்ளார்.

மேலும், தான் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கான அனைத்து சந்தர்ப்பங்களிலும் முன் நின்று செயற்படுவதாக குறிப்பிட்டவர் அதற்காக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை ஒரு போதும் காட்டிக்கொடுக்கப் போவதில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மீண்டும் தேர்தல் ஒன்றில் வெற்றி பெற வேண்டுமாயின் மஹிந்த ராஜபக்ஷ நிச்சியமாக அதற்கு இணைய வேண்டும் என இதன் போது கருத்து வெளியிடப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.