சஜின் வாஸ் வெளிநாடு செல்ல அனுமதி (Update)

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன சிங்கப்பூருக்கு விஜயம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஐந்து நாட்கள் சிங்கப்பூருக்கு பயணம் செய்ய நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

சஜின் வாஸ் குணவர்தன பிணையில் விடுதலை செய்யட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி செலயகத்திற்கு சொந்தமான வாகனங்களை துஸ்பிரயோகம் செய்ததாக சஜின் வாஸ் குணவர்தன மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஐந்து நாட்களுக்கு மட்டும் சிங்கப்பூர் சென்று திரும்ப கொழும்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

 

(1ம் இணைவு)

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன,  வைத்திய சிகிச்சைக்காக வெளிநாடு செல்வதற்கு அனுமதியளிக்குமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

அவரது கோரிக்கை தொடர்பில், இன்று(20) பரிசீலிக்கப்படும் என்று கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டி, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு நேற்று(19) திங்கட்கிழமை நோட்டீஸ் அனுப்பிவைத்துள்ளார்.

சொத்துக்கள் மற்றும் ஆதனங்கள் தொடர்பிலான இலஞ்ச வழக்கு காரணமாக அவரது கடவுச்சீட்டு நீதிமன்றத்தினால் தடுத்துவைக்கப்பட்டுள்ளது.

சிகிச்சை பெறுவதற்குத் தனது தரப்பை சேர்ந்த சஜின் வாஸ் குணவர்தன, வெளிநாட்டுக்குச் செல்லவேண்டியிருப்பதால், அவருக்கு அனுமதியளிக்குமாறு அவரது சட்டத்தரணி, நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரத்தைத் தாக்கல் செய்தார். இதனையடுத்தே இந்த நகர்த்தல் பத்திரத்தை இன்று பரிசீலிப்பதற்கு, வழக்கின் மனுதாரரை ஆஜராகுமாறு நீதவான் நேற்று நோட்டீஸ் அனுப்பிவைத்தார்.