(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நோய் அறிகுறிகளற்ற, அபாய நிலையில் இல்லாத கொரோனா நோயாளர்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்தும் நடவடிக்கையை எதிர்வரும் திங்கட்கிழமை (09) முதல் ஆரம்பிக்கவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மருத்துவ கண்காணிப்பின் கீழ் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்திருந்தார்.
மேல் மாகாணத்தில் ஏற்கனவே இந்த திட்டம் நடைமுறையில் உள்ளதுடன், நாடளாவிய ரீதியில் எதிர்வரும் திங்கட்கிழமை (09) முதல் அமுல்படுத்தப்படவுள்ளது.
வீட்டில் உள்ள நோயாளர்களுடன் தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு ஆலோசனை வழங்கும் வகையிலான திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
மேலும், வைத்தியசாலைகளில் நிலவும் நெருக்கடி காரணமாக, வீட்டு தனிமைப்படுத்தல் தொடர்பான சுகாதார வழிகாட்டல் கோவை, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வௌியிடப்பட்டுள்ளது.
டெல்டா பிறழ்வு சடுதியாக பரவும் நிலையில், வைத்தியசாலைகளில் உள்ள கட்டில்களுக்கு மேலதிகமாக நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.