“காந்தாரா” – பாகிஸ்தானின் பெளத்த பாரம்பரியம்” – ஆவணப்படம் விரைவில்

“காந்தாரா” – பாகிஸ்தானின் பெளத்த பாரம்பரியம்” – ஆவணப்படம் விரைவில்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாகிஸ்தானின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, 2021 ஆம் ஆண்டு கண்டி எசலா பெரஹெரா விழாவுடன் இணைந்து, பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் ஒரு ஆவணப்படத்தை வெளியிடவுள்ளது.

“காந்தாரா” – பாகிஸ்தானின் பெளத்த பாரம்பரியம்” என்ற தலைப்பிலான இந்த ஆவணப்படம் பாகிஸ்தானில் உள்ள பழமையான பெளத்த பாரம்பரிய இருப்புக்களை முன்னிலைப்படுத்தி சித்திவிநாயக் சினி ஆர்ட்ஸ் (பிரைவேட்) லிமிடெட் மற்றும் புத்த சாசனம், மத மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சின் ஒருங்கிணைப்புடன் இணைந்து தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.