கடந்த அரசாங்கத்தில் அதிக செல்வாக்கின் கீழ் இயங்கிய இலங்கையின் முதனிலை வார இறுதி பத்திரிகைகளில் ஒன்றான, தி நேசன் (The Nation) பத்திரிகை நிறுவனம் மூடப்பட்டுள்ளது.
இன்றைய தினம் முதல் பத்திரிகை நிறுவனத்தை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாக செயற்பட்ட குறித்த பத்திரிகைக்கு தற்போதைய அரசாங்கம் விளம்பரங்கள் எதனையும் வழங்கவில்லை.
நேசன் பத்திரிகை ஆசிரியர் பீடத்துடன், இன்று நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நேசன் பத்திரிகை மூடப்பட்டால் நல்லாட்சி அரசாங்கத்தின் ஊடாக மூடப்படும் இரண்டாவது பத்திரிகை இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னர் ரந்திவ என்ற சிங்களப் பத்திரிகை மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.