முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன மற்றும் அவரது மனைவிக்கு எதிராக நான்கு லீசிங் நிறுவனங்கள் வழக்குத் தாக்கல் செய்துள்ளன.
கொழும்பு வர்த்தக நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் மேற்குறித்த நிறுவனங்களால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சஜின் மற்றும் அவரது மனைவி ஆகியோரிடமிருந்து 737 696 044 ரூபா நிலுவைப் பணத்தை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாகத் தெரிவித்து வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
சஜின் வாஸ் குணவர்தன, அவரது மனைவி மற்றும் மனைவி கடமையாற்றி வரும் நிறுவனமொன்றின் பணிப்பாளர் ஆகியோருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
கொழும்பு வர்த்தக நீதிமன்றில் இரண்டு வழக்குகளும் கொழும்பு மாவட்ட நீதிமன்றில் இரண்டு வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன.
குறித்த இந்த வழக்கு விசாரணைகளில் முன்னிலையாகுமாறு குறித்த நபர்களுக்கு அழைப்பாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.