மூத்த நடனக்கலை நிபுணர்களான சன்ன விஜேவர்தன மற்றும் உபாலி பனிபரத்த ஆகியோர், பாரிய மோசடி, ஊழல், அரச வளங்கள் மற்றும் அதிகார சிறப்புரிமைகள் துஷ்பிரயோகம் ஆகியவற்றை புலனாய்வு செய்வதற்கும் ஆராய்வதற்குமான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு வாக்குமூலமளிப்பதற்காக சென்றுள்ளனர்.
ஹம்பந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ துறைமுக திறப்புவிழாவின் போது, அங்கு இடம்பெற்ற நடன நிகழ்வில் 15 மில்லியன் ரூபாய் நிதி மோசடி இடம்பெற்றமை தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்கே, இவ்விருவரும் வரழைக்கப்பட்டுள்ளனர்.