இலங்கை தொலைக்காட்சிகளில் சனல்-4 ஊடகத்தினால் இலங்கை தொடர்பில் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ள ஆவணப்படம் ஒளிபரப்புச் செய்யப்பட வேண்டுமென ஊடகவியலாளர் கலெம் மக்ரே கோரியுள்ளார்.
கூடிய விரைவில் நோ பயர் ஸோன் ஆவணப்படத்தை காட்சிப்படுத்துமாறு கோரியுள்ளார்.
ஆவணப்படம் தொடர்பில் மெக்ஸ்வெல் பரணகம அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் வரவேற்கப்பட வேண்டியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பு மட்டுமன்றி இலங்கை அரசாங்கமும் ஆவணப்படத்தை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் இனியும் இலங்கை தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஆவணப்படத்தை ஒளிபரப்புச் செய்வதனை தாமதிக்கக் கூடாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை முடிவுக்குக் கொண்டு வரப்படுவதன் மூலம் அனைத்து இன சமூகங்களும் நன்மை அடையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உண்மையைக் கண்டறிய வேண்டியது மிகவும் அவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.