பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள எவன்கார்ட் ஆயுதக் கப்பல் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
அதன்படி எதிர்வரும் 28ம் திகதி அந்த ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் சிலர் குறித்த கப்பலுக்குள் செல்ல இருப்பதாக ஆணைக்குழுவின் தலைவர் லெஸில் டி சில்வா தெரிவித்தார்.
மேலும், 05 பேர் அடங்கிய குழுவொன்றே விசாரணைகளுக்காக கப்பலுக்குள் செல்ல இருப்பதாக அவர் தெரிவித்தார்.
குறித்த சர்ச்சைக்குறிய கப்பல் தற்பொழுது பொலிஸ் திணைக்களத்தின் பொறுப்பில் இருப்பதுடன், அது தொடர்பான விசாரணைகள் குற்றப்ப புலனாய்வு திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எனவே பொலிஸ் மா அதிபரிடம் கப்பலுக்குள் உள்நுழைவதற்கான அனுமதியை கோரியிருப்பதாக ஆணைக்குழுவின் தலைவர் லெஸில் டி சில்வா மேலும் தெரிவித்தார்.