இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி, காதலி அனுஷ்காவுடன் சேர்ந்து வசிக்க மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை வாங்க திட்டமிட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் துணைத் தலைவரான விராட் கோஹ்லியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் நீண்ட நாட்களாக காதலித்து வருகின்றனர்.
இந்நிலையில் அனுஷ்கா சர்மா, விராட் கோஹ்லியை விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருந்தார். இந்த ஆண்டு இறுதியில் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த விரும்பும் கோஹ்லி, திருமணத்தை தள்ளிப் போட்டுள்ளாராம். இந்த திருமண விவகாரத்தால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கோஹ்லியும், அனுஷ்காவும் ஒரே வீட்டில் சேர்ந்து வசிக்க முடிவு செய்துள்ளனராம். இதற்காக டெல்லியில் வசிக்கும் கோஹ்லி, மும்பை வந்து வோர்லி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை தேர்வு செய்துள்ளாராம்.