காணாமல் போனோர் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை தொடர்பிலான பல்வேறு பிரச்சினைகளுக்கு பதிலளிப்பதற்கு ஆணைக்குழுவினால் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தபால் அல்லது தொலைபேசி ஊடாக அந்த பிரச்சினைகளை அறிவிக்க முடியும் என ஆணைக்குழுவின் செயலாளர் டப்ல்யூ.எச்.குணதாஸ தெரிவித்துள்ளார்.
பரணகம அறிக்கை எனப்படும் காணாமல் போனோர் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை அண்மையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
அந்த அறிக்கையினை http://www.pcicmp.lk/ என்ற ஆணைக்குழு இணையத்தளத்தில் வாசிக்க முடியும் மற்றும் pcicmp@sltnet.lk மின்னஞ்சல் முகவரி ஊடாக பிர்ச்சினைகளை அறிவிக்க முடியும்.