கப்பல்துறை பிரதியமைச்சர் முத்துஹெட்டிகமவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

துறைமுகங்கள் அபிவிருத்தி, கப்பல்துறை பிரதியமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகமவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார காலகட்டத்தில் பொது அபேட்சகராகப் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவின் பிரச்சார மேடையொன்று காலி, வந்துரம்பை பகுதியில் தீக்கிரையாக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டிருந்த சந்தேக நபர்களை பிரதியமைச்சர் முதுஹெட்டிகம பொலிஸ் நிலையத்தில் இருந்து பலவந்தமாக விடுவித்துச் சென்றிருந்தார்.

இந்நிலையில் பொலிஸ் நிலையத்தில் அத்துமீறி நடந்து கொண்ட சம்பவம் தொடர்பில் அவருக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்கு இன்று காலி, பத்தேகம நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

வழக்கு விசாரணைக்காக பிரதியமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகமவும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.
எனினும் வழக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 14ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.