உள்ளுராட்சி மன்ற எல்லை நிர்ணயக்குழு இன்று புதன்(28) கூடவுள்ளது. இன்னும், தொகுதிகளை நிர்ணயம் செய்வது தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து இந்த குழு ஆராயவுள்ளது.
பிரச்சினைகளுக்கு தீர்வு காணல் மற்றும் புதிய யோசனைகளை ஏற்றுக் கொள்ளல் ஆகிய நோக்கங்களுக்காக இன்று இந்தக் குழு கூடவுள்ளது.
உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் ஐந்து பேர் அடங்கிய இந்த குழு நியமிக்கப்பட்டிருந்தது. குறித்த இந்தக் குழுவிற்கு அசோக பீரிஸ் தலைமை தாங்குகின்றார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் எஸ்.எம். மிஸ்வார், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் சட்டத்தரணி சாலிய மெத்திவ், ஜே.வி.பி சார்பில் சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை ஆகியோர் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
முதல் அமர்வுகள் என்ற காரணத்தினால் அமைச்சர் முஸ்தபாவும் இன்றைய தினம், இந்த அமர்வுகளில் பங்கேற்கவுள்ளார்.