இலங்கை வர மஹிந்த அரசு அனுமதி மறுத்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உயர் அதிகாரியும், பூகோள பெண்கள் விவகாரங்களுக்கான தூதுவர் கத்தரின் ருசெல், இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு நேற்று கொழும்பு வந்தார்.
இன்று வடக்குக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள இவர், அங்கு முத்தரப்பு சந்திப்புகளில் ஈடுபடவுள்ளார். இந்தக் குறித்த விஜயத்தின் போது அரச மட்ட உயர் அதிகாரிகள் பலருடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் மத தலைவர்களுடனும் பேச்சுக்களை நடத்த கத்தரின் ருசெல் தீர்மானித்துள்ளதாக அமெரிக்க இராஜங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
பாலின அடிப்படையிலான வன்முறை, பெண்களை பொருளாதார மேம்பாடு அடையச் செய்தல், அமைதி மற்றும் பாதுகாப்பு உட்பட பெண்களின் பிரச்சினைகள் சம்பந்தமாக குறித்த பேச்சுவார்தைகளின் போது அவதானம் செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.