நடிகை உபேக்ஷா பக்கம் திசை திரும்பும் ஜனாதிபதி ஆணைக்குழு

பிரபல சிங்கள நடிகையும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உபேக்ஷா ஸ்வர்ணமாலி எனப்படும் “பபா” மற்றும் பிரபல கலைஞர் பந்துல விஜேவீர ஆகியோரிடம் பாரிய நிதி மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை நடத்த உள்ளது.

இருவரையும் இன்று ஆணைக்குழு எதிரில் முன்னிலை ஆகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கில் அழைக்கப்பட்டுள்ளனர்.

விமான சேவை நிறுவனத்தில் இடம்பெற்ற நிதி மோசடிகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் செய்துள்ள முறைப்பாடு குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

கடந்த தேர்தல் காலத்தில் பிரச்சாரப் பணிகளுக்காக கலைஞர்கள் என்ற அடிப்படையில் இவர்கள் விமான சேவை நிறுவனத்திடம் பணம் பெற்றுக்கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மேலும் இரண்டு பாடகர்களிடம் வாக்கு மூலம் பெற்றுக் கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மோசடிகள் தொடர்பில் அமைச்சர் பிரியங்கர ஜயரட்னவிடமும் விசாரணை நடத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.