இலங்கையில் அன்றாட தேவைகளுக்கு செலவிட திறைசேரியில் பணம் இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அன்றாட நுகர்வுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான செலவினங்களுக்காக உடனடியாக நிதியைக் கண்டறிய வேண்டியதன் அவசியம் தொடர்பான விரிவான அறிக்கை அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
இன்று நாடாஅளுமன்றில் உரையாற்றுகையில் அவர் இதனை கூறினார்.
அதேசமயம் உணவு நெருக்கடி உலகளாவிய நெருக்கடியாக மாறுவதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் நிலைமையை முன்னறிவிப்பதற்கும் நடவடிக்கை எடுப்பதற்கும் உலக வங்கி 30 பில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
மேலும் இந்த விடயம் இலங்கையை மாத்திரம் பாதிக்கும் பிரச்சினையல்ல எனவும் பிரதமர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதன்போது சுட்டிக்காட்டினார்.
ஜானாதிபதியின் போதைப்பொருள் ஒளிப்பு தொடர்பான கூட்டத்தொடர் ஒன்று இன்று முல்லைத்தீவு, முள்ளியவளை பாடசாலையில் இடம்பெற்று முடிந்த பின்னர் திரும்பிக் கொண்டிருந்த இலங்கை இராணுவத்தின் டிபெண்டர் வண்டியொன்று நெடுங்கேர்ணி…
இலங்கையின் குறுந்தூர ஓட்ட வீராங்கனை சுசந்திகாவுக்கு தனது பதக்கத்தை ஏலத்தில் விடுவதற்கு எந்தவொரு தேவையும் கிடையாது எனவும், அவருடைய குறித்த இந்த தீர்மானத்தில் வேறு உள்நோக்கம் இருப்பதாகவும்…
ரயில் கட்டணங்கள் 15 வீதத்தால் திருத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதற்கான வர்த்தமானி அறிவித்தல் தயாரித்து அமைச்சிடம் ஒப்படைத்துள்ளதாக பிரதி வணிக அத்தியட்சகர் என்.ஜே. இதிபொலகே தெரிவித்துள்ளார். இந்நிலையில், ரயில்வே…