மைனா கோ கம மற்றும் கோட்டா கோ கம ஆகியவற்றில் அமைதியாக போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள டேன் பியசாத் உட்பட8 சந்தேக நபர்களை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
மொறட்டுவை மாநகர மேயர் சமன் லால் பெர்னாண்டோ, சீதாவாக்கபுர பிரதேச சபையின் தலைவர் ஜயந்த ரோஹன, களனி பிரதேச சபையின் தலைவர் மஞ்சுள பிரசன்ன, டேன் பியசாத் உள்ளிட்டோர் இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 9 ஆம் திகதி போராட்டகார்கள் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் இவர்கள் நேற்று குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
மதவாச்சி, பூனாவ பிரதேசத்தில் போலி நாணயத்தாள்கள் மூன்றுடன் கடற்படை சிப்பாய் ஒருவர் இன்று(14) கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர்(28 வயது) பிரதேசத்தில் உள்ள மின் உபகரண விற்பனை…
மிக் விமானக் கொள்வனவில் நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் சர்வதேச பொலிசாரின் தடுப்பில் உள்ள ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்கவை இலங்கைக்கு நாடுகடத்த முடியாதுள்ளதாக…