பல தசாப்தங்களில் வெளிநாட்டு கடனைத் திருப்பிச் செலுத்தாத முதல் ஆசிய-பசிபிக் நாடாக இலங்கை இன்று உத்தியோகபூர்வமாக மாறியுள்ளது.
வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான காலக்கெடுவை நாடு தவறவிட்டதை இலங்கையின் மத்திய வங்கி உறுதிப்படுத்தியுள்ளது.
அதற்கமைய, ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் இந்த நூற்றாண்டின் முதல் வெளிநாட்டு கடனை திருப்பிச் செலுத்தாத நாடு என இலங்கை பெயரிடப்பட்டுள்ளதாக மூடிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இரண்டு சர்வதேச இறையாண்மைப் பத்திரங்கள் மீதான வட்டிக் கொடுப்பனவுகளுக்கான 30 நாள் கால அவகாசம் நேற்றைய தினம் காலாவதியானது.
நாடு பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், இந்த நிலைமை மேலும் கடுமையாக்கும் என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பட்டியலில் இதற்கு முன்னர் 1999ஆம் ஆண்டு பாகிஸ்தான் இடம்பெற்றிருந்ததென மூடிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் நேற்று(24) மாலை மர்மமான முறையில்…
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஹோட்டல்களில் திருமண நிகழ்வுகளை நடத்த இன்று (01) முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பை சுற்றுலா மற்றும் விமானப் போக்குவரத்து…
சிங்கள பௌத்தர்களுக்குள்ள ஒரே நாடு ஸ்ரீலங்காவே என குரல் கொடுப்பவர்கள் நாட்டில் நிரந்தர அமைதியும் சுதந்திரமும் நிலைப்பதற்குச் செயற்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். கொழும்பில்…