ராஜபக்சவினரை வைத்துக்கொண்ட ரணில் அல்ல புத்த பகவான் வந்தாலும் நாட்டை கட்டியெழுப்ப முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
குரக்கன் சால்வையின் படம் இருக்கும் வரை நாடு முன்னேறாது. ராஜபக்சவினர் சம்பந்தப்பட்டுள்ள அரசாங்கம் சுனாமியை விட நாட்டுக்கு பாரதூரமான சேதங்களை ஏற்படுத்தும்.
நல்ல மனிதர்களை இணைத்துக்கொண்டு உண்மையான சர்வக் கட்சி அரசாங்கத்தை உருவாக்கி இருந்தால், மக்கள் வரிசைகளில் நிற்கும் நிலைமை ஏற்பட்டிருக்காது.
குறைந்தது மக்கள் அந்த அரசாங்கத்திற்கு ஒரு மாத கால அவகாசத்தையும் வழங்கி இருப்பார்கள். நல்ல சூழ்நிலை ஏற்பட்டால், நாடு அபிவிருத்தி அடையும் என்பதுடன் முதலீடுகளும் வர ஆரம்பிக்கும் எனவும் நளின் பண்டார கூறியுள்ளார்.
நாடெங்கிலும் நிலவும் வறட்சியான காலநிலையில், எதிர்வரும் 13ம் திகதி முதல் மாற்றம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது. இதன்படி வடக்கு கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில்…
உள்நாட்டு மற்றும் இறக்குமதி செய்யப்படும் நாட்டரிசிக்கு உயர்ந்த பட்ச சில்லறை விலையை நிர்ணயிக்க, நுகர்வோர் விவகார அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. ஒரு கிலோ கிராம் நாட்டரிசிக்கான…
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -வெளிநாட்டு டிஜிட்டல் நடவடிக்கையாளர்களை பதிவு செய்வதாகவே திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் மாறாக சமூகவலைத்தளப் பயன்பாட்டாளர்களை பதிவு செய்யப்படுவதில்லை என ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய…