இன்று பதவியேற்றுள்ள புதிய அமைச்சரவைக்கு சம்பளம் வழங்கப்படாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அமைச்சர்களின் சிறப்புரிமைகளை குறைப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக பிரதமர் தனது உத்தியோகபூர்வ முகநூல் தளத்தில் பதிவொன்றை இட்டு குறிப்பிட்டுள்ளார்.
சர்வகட்சி அரசாங்கத்தின் ஒன்பது புதிய அமைச்சரவை அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
புதிய அமைச்சரவை அமைச்சர்களுக்கு சம்பளம் வழங்கப்பட மாட்டாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளும் குறைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
முன்னதாக, பிரதமர் அலுவலகத்தின் செலவுகளை பாதியாகக் குறைப்பதற்கும், வேறு நிறுவனங்களில் இருந்து பெறப்பட்ட 16 வாகனங்களை திருப்பி அனுப்புவதற்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்திருந்தார்.
இலங்கை தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சுனில் எஸ். சிறிசேன தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். உடல் நலக் குறைவின் காரணமாக அவர் இவ்வாறு பதவியை…
வெற்றி பெற்றாலும் உங்களுக்கு பிரதமர் பதவி இல்லை – மைத்திரி, மஹிந்தவுக்கு கடிதம்மூலம் அறிவிப்பு! ! கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமான பகுதிகள் இதோ… “நீங்கள் என்னுடன் ஒத்துழைத்து…
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதலுக்கு உதவியதாக கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த 10 ஆண் சந்தேக நபர்களையும்,…