மே 9 ஆம் திகதி நடந்த சம்பவம் ; மஹிந்த வெளியிட்ட தகவல்!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

கொழும்பில் மே 9 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் பொதுஜன பெரமுன மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகம ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.

கோட்ட கோ ஹம ஆர்ப்பாட்ட காரர்களை தாக்குவதற்காக தான் காலி முகத்திடலுக்கு சென்றதான தகவலை மஹிந்த கஹந்தகம இதன்போது மறுத்துள்ளார்.

அத்துடன் நான் அலரிமாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு மாநகர சபைக்கு வந்தேன், அதன் பின்னரே சபையில் இருந்து வெளியில் வந்த நான் தாக்கப்பட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் வைத்தியசாலையில், அங்கு யாரோ ஒருவர் தனது கையில் 69 என்ற இலக்கத்தை ஒட்டியதாகவும் மஹிந்த கஹந்தகம குற்றம் சுமத்தியுள்ளார்.