வெளியிடப்பட்ட தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளி அதிகரிப்புக்கு எதிராக, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆசிரியர் சேவை சங்கம், நேற்று(26) முறைப்பாடொன்றை செய்துள்ளது.
மாவட்ட மட்ட வெட்டுப்புள்ளி அதிகரிப்பால் முதலாம் வினாப்பத்திரத்தில் 75 புள்ளிகள் என்ற வீதத்தில் இரு வினாப்பத்திரங்களிலும் 150 புள்ளிகளைப்பெற்ற மாணவர்கள் சித்தியடையாதவர்களாகி உள்ளனர் என்றும் அச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
ஆகையினால், கடந்த ஆண்டைப்போல மாவட்ட மட்டத்திலான திருத்த வெட்டுப்புள்ளிகளை இம்முறையும் அமுல்படுத்துமாறு அச்சங்கம் கூறியுள்ளது.
புலமைப்பரிசில் பரீட்சையில் 2014ஆம் ஆண்டு சித்தியடைந்தோர் என்ணிக்கை 51,152 ஆகும். எனினும், 2015ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கை 31,853 ஆக குறைந்துள்ளது. ஆகையால், வெட்டுப்புள்ளிகளில் திருத்தங்களை ஏற்படுத்தி பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நிவாரணத்தை பெற்றுக்கொடுப்பதற்கு வழியமைக்குமாறும் அச்சங்கம் தமது முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளது