அவதூறு வழக்கில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார் ரஞ்சன்!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்று நீர்கொழும்பு மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக தாக்கல் செய்த அவதூறு வழக்கு தொடர்பிலேயே அவர் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இந்த வழக்கு செப்டெம்பர் 31, 2022க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்யுமாறு கோரி நீர்கொழும்பு நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக அமைதி போராட்டம் ஒன்று இடம்பெற்றது.