
அட்டுலுகம சிறுமியின் மரணம் : விசாரணை CID யிடம் ஒப்படைப்பு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அட்டுலுகம பிரதேசத்தைச் சேர்ந்த 09 வயது சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை காணாமற்போன ஒன்பது வயது சிறுமியின் சடலம் நேற்று பண்டாரகம, அட்டுலுகமவில்லுள்ள அவரது வீட்டின் பின்புறமுள்ள சதுப்பு நிலப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.
