ஜனாதிபதி செயலணியிலிருந்து விலகுவதாக அறிவித்தார் கலீலுர் ரஹ்மான்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியிலிருந்து விலகுவதாக கலீலுர் ரஹ்மான் அறிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம் தனியார் சட்டங்களில் திருத்தம் செய்து அவற்றை பாதுகாப்பதற்கு பதிலாக அந்த சட்டங்களை பறித்தெடுப்பதற்கான முயற்சிகளை ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செலணி, மேற்கொண்டிருப்பதாக அவர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்காரணமாக ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி முன்வைக்கவுள்ள அறிக்கையில் தம்மால் கையொப்பமிட முடியாது என கலீலுர் ரஹ்மான் அனுப்பி வைத்துள்ள 6 பக்கங்கள் கொண்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செயலணியில் இருந்து விலகிய மூன்றாவது முஸ்லிம் உறுப்பினர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.