ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளுக்கான கட்டணம் அதிகரிப்பு!

ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளுக்கான கட்டணம் அதிகரிப்பு!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளுக்கான கட்டணம் எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் அதிகரிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் விலை அதிகரிப்பினால் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக முன்பதிவு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

அதன்படி, முன்பதிவு செய்யப்பட்ட ஆசனங்களுக்கான கட்டணம் ஜூன் முதலாம் திகதி முதல் 30 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.