மஹிந்தவின் வீட்டை புனரமைக்க 100 கோடி ரூபா!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தை புனரமைக்க 100 கோடி ரூபாவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மஹரகம நகரசபை உறுப்பினர் தனுஷ்க ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக இருந்த காலத்தில் சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்தில் பிரதமரின் செலவினத் தலைப்பின் கீழ் இதனை நிர்மாணிப்பதற்கான நிதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
கொழும்பு 07, விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தை புனரமைப்பதற்காக ஒரு பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இணையத்தில் வெளியாகியுள்ள காணொளி ஒன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்