தேசபந்து தென்னகோனுக்கு இரண்டு வாரங்கள் விடுமுறை

தேசபந்து தென்னகோனுக்கு இரண்டு வாரங்கள் விடுமுறை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று (திங்கட்கிழமை) முதல் இரண்டு வாரங்களுக்கு விடுமுறையில் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேல்மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கடந்த வாரம் இரண்டு வாரங்களுக்கு விடுமுறை தேவை என அறிவித்திருந்தார்.

விடுமுறைக்கு அனுமதி கிடைத்ததையடுத்து, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் கடமைகளை உள்ளடக்கியதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜகத் பலிஹக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும் மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரை மேல் மாகாணத்தில் இருந்து நீக்குமாறு சட்டமா அதிபர் பொலிஸ் மா அதிபருக்கு விடுத்த உத்தரவு இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

சட்டமா அதிபர் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்தாதது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துவதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸ் மா அதிபருக்கு சட்டமா அதிபர் உத்தரவு பிறப்பித்து ஒரு வாரத்திற்கு மேலாகியும் இதுவரை அந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்படவில்லை.