சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய பணிகளை ஆரம்பிப்பதில் தாமதம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் ஆரம்பிப்பதில் சிறு தாமதம் ஏற்படுவதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
சிறு தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டதனால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளது.
கடந்த மூன்று மாதங்களாக செயல்படாமல் இருந்த இந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்ட பொழுது இந்த தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்