பிரித்தானிய பிரதமருடன் ரணில் விசேட கலந்துரையாடல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இது தொடர்பில் பிரதமர் ரணில் தமது உத்தியோகபூர்வ ட்வீட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

கலந்துரையாடப்பட்ட விடயங்கள்

இன்று பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனுடனான கலந்துரையாடலின் போது, இலங்கையின் நிலைமை குறித்து நான் அவருக்கு விளக்கினேன்.

இத்போது குறிப்பாக காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது மற்றும் ஏற்றுமதி சார்ந்த திறந்த பொருளாதாரமாக இலங்கை மாறுவதற்கு உதவுவது போன்ற துறைகளில் எமக்கு ஆதரவளிப்பதாக அவர் உறுதியளித்துள்ளார்” என்று கலந்துரையாடலுக்குப் பின்னர் பிரதமர் ட்வீட் செய்துள்ளார்.