தெமட்டகொடையில் பெண் ஒருவர் கொலை

தெமட்டகொடையில் பெண் ஒருவர் கொலை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தெமட்டகொடை தொடருந்து பாதையில் உள்ள உணவகம் ஒன்றில் பணிப்புரியும் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் தெமட்டகொடை தொடருந்து பாதையில் உணவகம் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.

குறித்த சம்பவம் கடந்த 29ஆம் திகதி இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், உயிரிழந்த பெண் வைத்திருந்த 3 தங்க நகைகள், 3 தங்க மோதிரங்கள் மற்றும் 2 கையடக்கத் தொலைபேசிகள் என்பனவும் திருடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் கொழும்பு மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் தனது 10 வயது மகனுடன் உறங்கிக் கொண்டிருந்த போதே கொலை செய்யப்பட்டுள்ளதாக, விசாரணைகளை முன்னெடுத்துவரும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சம்பவத்தின் பின்னர் உணவகத்தின் ஊழியர்கள் மூவர் காணாமல் போயுள்ள நிலையில், தெமட்டகொடை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.