சஷி வீரவங்ச பிணையில் விடுதலை

சஷி வீரவங்ச பிணையில் விடுதலை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சட்ட விரோதமான முறையில் இராஜதந்திர கடவுச்சீட்டு பெற்ற வழக்கில் 2 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த விமல் வீரவன்சவின் மனைவி,சஷி வீரவன்சவுக்கு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

இவருடைய,மேன்முறையீட்டு மனு, விசாரணைக்கு எடுக்கப்படும் வரை இந்தப் பனை வழங்கப்படுவதாக நீதிமன்றம் அறிவித்தது.

குடிவரவு,குடியகல்வு திணைக்களத்துக்கு பொய்யான தகவல்களை முன்வைத்து,முறையற்ற விதத்தில் இராஜதந்திர கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டமை, அதனை உடன் வைத்திருந்தமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவை குற்றவாளியாக கண்ட நீதிமன்றம், அவருக்கு இரு வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ள நிலையில், அதற்கு எதிராக அவர் முன் வைத்துள்ள மேன் முறையீட்டு கோரிக்கை இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, குறித்த மேன் முறையீட்டு கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு பிரதம நீதவான், சஷி வீரவன்சவுக்கு பிணை வழங்கியுள்ளது.