மொரட்டுவை நகர முதல்வர் சமன்லால் பெர்னாண்டோ பிணையில் விடுதலை

மொரட்டுவை நகர முதல்வர் சமன்லால் பெர்னாண்டோ பிணையில் விடுதலை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  மொரட்டுவை மாநகர சபை உறுப்பினர் நிரோஷன் ருவமல் அப்போன்சுவை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மொரட்டுவை நகர முதல்வர் சமன்லால் பெர்னாண்டோ பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு நேற்று மொரட்டுவ நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, தலா 100,000 ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் மொரட்டுவை நகர முதல்வர் சமன்லால் பெர்னாண்டோ விடுவித்து நீதிவான் உத்தரவிட்டார்.

மொரட்டுவை நகர முதல்வர் தம்மை தாக்கியதாக கூறி மொரட்டுவை மாநகர சபை உறுப்பினர் நிரோஷன் ருவமல் அப்போன்சுவினால் அண்மையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதில், முதலாவது சந்தேக நபர் மாநகர சபை ஊழியர் எனவும் இரண்டாவது சந்தேக நபர் மொரட்டுவை நகர முதல்வர் சமன்லால் பெர்னாண்டோ எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.