ஜானதிபதி மைத்ரி பால சிறிசேன அவர்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வித்யாவின் தாய் மற்றும் சகோதரரினை நேற்று (26) யாழ் ஆளுநர் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தார்.
இதன் போது அவர் கூறுகையில் இவ்வாறான மிலேச்சைத்தனமான நடவடிக்கைகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்படும் என்றும் இதன் பின்னர் இவ்வாறான விபரீதங்கள் நடக்கக் கூடாதென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதன் போது வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், துணை அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.