ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ எங்கே..! தொடர்ந்தும் தேடும் பொலிஸார்!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –
ஜோன்ஸ்டன் எங்கே?
காலி முகத்திடலில் அமைதியான போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்னும் கைது செய்யவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது
அவரை கைது செய்ய பல குழுக்கள் அனுப்பப்பட்டுள்ள போதிலும் இன்னும் அவர் கைதுசெய்யப்படவில்லை.
பொலிஸ் குழுக்கள்
இந்தநிலையில் முன்னாள் அமைச்சரை கைதுசெய்வதற்காக பல பொலிஸ் குழுக்கள் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவங்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகம உள்ளிட்ட நால்வர் சந்தேகநபர்களாக குறிப்பிடப்படவுள்ளதாக கடந்த வாரம் சட்டமா அதிபர் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தார்.
இதில், மஹிந்த கஹந்தகம குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் சரணடைந்த பின்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஜூன் 2ஆம் திகதி கைதுசெய்யப்பட்டார்
இதனையடுத்து அவரை ஜூன் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவிட்டார்.