ரஞ்சனுக்கு 2 வருட கடூழிய சிறைத்தண்டனை

ரஞ்சனுக்கு 2 வருட கடூழிய சிறைத்தண்டனை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டாவது வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்தக் கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட ரஞ்சன் ராமநாயக்கவுக்கு உயர் நீதிமன்றத்தினால் 5 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

புவனேக அலுவிஹாரே, எல். டி. பி. தெஹிதெனிய மற்றும் காமினி அமரசேகர ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழுவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.