மற்றுமொரு கப்பல் நாட்டை வந்தடைந்தது
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 3,900 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய மற்றுமொரு கப்பல் நாட்டை இன்று வந்தடைந்துள்ளதாக, லிட்ரோ நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, மிகுதி 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்தி எரிவாயுவை தரையிறக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய மேலும் 6 நாட்களுக்கு எரிவாயு விநியோகம் இடம்பெறுமென அவர் தெரிவித்துள்ளார்.