ரவிந்து மற்றும் அவரது மனைவிக்கு பிணை!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கைது செய்யப்பட்டு இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திலிப் வெதஆரச்சியின் மகன் மற்றும் மருமகள் ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் இன்று வலஸ்முல்லை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் இந்த பிணை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 1ஆம் திகதி தெற்கு அதிவேக வீதியின் பெந்திகம சந்திப்பில் பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் குற்றவியல் வன்முறையில் ஈடுபட்டதாக ரவிந்து வெதஆராச்சி மற்றும் அவரது மனைவி நெத்மி ஹரிந்தி டி சில்வா ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வௌியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.