பிரதமர் ரணில் பதவியேற்றபோது உலகம்  உதவும் என்ற எதிர்பார்ப்பு வீண் போய்விட்டது- மரிக்கார்.

பிரதமர் ரணில் பதவியேற்றபோது உலகம் உதவும் என்ற எதிர்பார்ப்பு வீண் போய்விட்டது- மரிக்கார்.

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவியேற்ற போது வெளிநாடுகளில் எல்லாம் வாரி வழங்கும் என்று எதிர்பார்த்தார்கள்.எந்த நாடும் இல்லை. எந்த ஒரு நாடும் கணக்கில் எடுத்ததாக தெரியவில்லையென ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் S. M மரைக்கார் பாராளுமன்றத்தில் பேசினார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர்,ரணில் விக்கிரமசிங்க பிரதமராக வந்த வருமாறு எதிர்பார்ப்பு இருந்தது.எதுவுமே நடக்கவில்லை. பேசிப் பேசி காலத்தை கடத்தாமல் உரிய திட்டங்களை வகுத்து மக்களை காப்பாற்றுங்கள். பாராளுமன்றத்துக்குள் வந்து வைலா அடித்துக் கொண்டிருக்காமல், உரிய தீர்வுகளை நடைமுறைப்படுத்துங்கள்.

காலிமுகத்திடல் போராட்டம் முடிவடைந்து விட்டதாக சிலர் கருதுகிறார்கள். உத்வேகத்தோடு அது நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆலப்பி நீங்கள் படிக்கின்ற பொழுது இன்னும் உத்வேகம் பெறும் சாத்தியம் இருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள் என்றும் சுட்டிக்காட்டினார்.
திருக்குமரன் நடேசன் போன்றவர்கள் நாடு திரும்பியிருக்கிறார்கள். அவர்களை கைது செய்தீர்களா?

பி. வீ.ஜயசுந்தர,அஜித் கப்ரால் போன்றவர்களை விசாரணைக்கு உட்படுத்தினர்களா?
பேசிப் பேசி காலத்தை கடத்தாமல் உருப்படியாக எதையாவது செய்யுங்கள் என்று அவர் கேட்டுக்கொண்டார்