மே 9 தாக்குதலின் பின்னணியில் விஹாரைகளும் கிறிஸ்தவ தேவாலயங்களுமே இருந்துள்ளன! – பிரசன்ன ரணதுங்க
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மே மாதம் இடம்பெற்ற கலவரங்களுக்குப் பின்னால் பெளத்த விஹாரைகளும் கிறிஸ்தவ தேவாலயங்களுமே இருந்துள்ளன.
இந்த நாடு சிங்கள பெளத்த நாடு என்று கூறுவதற்கு மனமில்லை. ஏனெனில் எனது வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டவர் தேரர் ஒருவராவார் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று (10) தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
எமது நாடு சிங்கள பெளத்த நாடு என்று கூறுவதற்கு மனம் இல்லை. ஏனெனில் கடந்த மாதம் 9ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற வன்முறை, மிலேச்சத்தனமான நடவடிக்கைகளுக்கு தலைமைத்துவம் வழங்கியது கிராமங்களில் இருக்கும் எமது தேரர்களாகும். இதில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை.
எனது வீட்டுக்கு தாக்குதல் மேற்கொள்ள வந்தவர் பேராசிரியர் தேரர் ஒருவராவார் . தீ வைத்ததும் தேரர் ஒருவராவார் . தேரர்கள் இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதன் மூலம் இந்த நாட்டில் ஒழுக்கம் ஏற்படுமா என்பது சந்தேகமாகும். இந்த நிலை தொடர்ந்தால் தேரர்களுக்கு வீதியில் இறங்கி செல்ல முடியாத நிலைமை ஏற்படும் என்றார்.