ரஷ்ய விமானம் நடுவானில் வெடித்துச்சிதறியது – விசாரணைகளில் அம்பலம்

எகிப்தில் கெய்ரோ அருகேயுள்ள ஷராம் எல்–ஷேக் நகரில் இருந்து ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு புறப்பட்டு சென்ற பயணிகள் விமானம் சிருவாய் தீபகற்ப பகுதியில் ஹசானா மலை பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் அதில் பயணம் செய்த 224 பேரும் பலியாகினர்.

இதுகுறித்து எகிப்து அரசு விசாரணை நடத்தி வருகிறது. ரஷியாவும், பிரான்சும் அதற்கு உதவி புரிகின்றனர். மீட்பு குழுவினர் விமானத்தில் 2 கருப்பு பெட்டிகளை கைப்பற்றி ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்றனர். அதை எகிப்து மற்றும் ரஷியா மறுத்தன. ஆனால் தற்போது விமானம் தொழில் நுட்ப கோளாறு காரணமாக கீழே விழுந்து நொறுங்கவில்லை.

நடுவானிலேயே வெடித்து பல துண்டுகளாக உடைந்துள்ளது என ரஷிய புலனாய்வு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமானத்தின் உடைந்த சிதறல் பாகங்கள் 20 சதுர கிலோ மீட்டர் தூரத்துக்கு பரவி கிடக்கின்றன. இதன் மூலம் விமானம் நடுவானில் உடைந்து சிதறியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மேலும் மீட்கப்பட்ட உடைந்த பாகங்களில் உலோக மூலக்கூறுகள் எரிந்த வாசனை உள்ளது. இதை வைத்து பார்க்கும்போது விமானத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் குண்டு வைத்து வெடிக்க செய்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

விபத்துக்குள்ளான இந்த விமானம் கடந்த 2001–ம் ஆண்டு கெய்ரோ விமான நிலையத்தில் தரை இறங்கும் போது சுவற்றில் மோதி வால் பகுதியில் சேதம் ஏற்பட்டது. அதை சீரமைத்து தொடர்ந்து பயணத்துக்கு அந்த விமானம் பயன்படுத்தப்பட்ட தகவலும் கிடைத்துள்ளது.