நண்பரின் வீட்டில் பாதுகாப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் காணாமல் போனதாக பொலிஸில் முறைப்பாடு!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாற்பது இலட்சம் ரூபா பெறுமதியான நீல மாணிக்கக்கல் மூன்றரை பவுண் நிறையுடைய தங்க நகை ஒன்றரை இலட்சம் பெறுமதியான மடிக் கணினி 41,000 ரூபா பெறுமதியான (மேலதிக) டயர் ஒன்றும் 15,000 ரூபா பெறுமதியான காற்று நிரப்பும் கருவியுடன் 80 இலட்சம் ரூபா பெறுமதியான தனது சொகுசுக் கார் காணாமல் போயுள்ளதாக கம்பளை தெல்பிட்டியைச் சேர்ந்த நபர் ஒருவரினால் கம்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த கார் கம்பளை தெல்பிட்டிய நவதேவிட்ட பிரதேசத்தில் பாதுகாப்பு கருதி நண்பர் ஒருவரின் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தபோது கடந்த 7 ஆம் திகதி இரவு 11 .30 மணியளவில் காணாமல் போயுள்ளதாகவும் காருக்குள் மேற்குறிப்பிட்ட மாணிக்கம் உட்பட பொருட்கள் இருந்ததாகவும் பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கம்பளை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேற்படி சம்பவம் தொடர்பாக Leesing நிறுவனத்திடம் விசாரணை மேற்கொள்ள நீதிமன்ற அனுமதியைப் பெற்றுக்கொண்டுள்ளனர்