இன்று முதல் புதிய ரயில், அலுவலக மற்றும் பாடசாலைகளுக்கான பேருந்துகள் சேவை ஆரம்பம்!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இன்று (புதன்கிழமை) முதல் புதிய ரயில், அலுவலக மற்றும் பாடசாலைகளுக்கான பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.கொழும்பில் இருந்து கண்டி வரையான சொகுசுரக கடுகதி புதிய ரயில் சேவை ஒன்று இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
தினமும் அதிகாலை 5.20 அளவில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து குறித்த ரயில் புறப்படவுள்ளது. இந்த ரயில் காலை 8.14 அளவில் கண்டியை சென்றடையவுள்ளது.
குறித்த ரயில் மாலை 4.50 அளவில் கண்டி ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு இரவு 7.40 அளவில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை வந்தடையவுள்ளது.
அதேபோன்று களனி வெளி ரயில் மார்க்கத்தில் புதிய ரயில் சேவை ஒன்றும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
வக ரயில் நிலையத்தில் இருந்து காலை 6.20 அளவில் புறப்படும் அலுவலக ரயில் காலை 8.12 அளவில் கொழும்பு கோட்டையை வந்தடையவுள்ளது.
மாலை 4 மணியளவில் கொழும்பில் கோட்டையில் இருந்து புறப்படும் ரயில் 5.43 அளவில் வக ரயில் நிலையத்தை சென்றடையவுள்ளது.
இதேவேளை, வார இறுதி விசேட ரயில் சேவை ஒன்றும் ஆரம்பிக்கப்படவுள்ளது.