2 வாரங்களுக்கு அரச சேவையாளர்களை சேவைக்கு அழைப்பதை மட்டுப்படுத்த தீர்மானம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரச செயற்பாடுகளை வீழ்ச்சியடையாது தொடர்ந்தும் முன்கொண்டு செல்வதற்காக மட்டுப்படுத்தப்பட்ட பணிக்குழாமினரை கொண்டு சேவைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கான சுற்று நிருபம் ஒன்று பொது நிர்வாக அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் 20ஆம் திகதியிலிருந்து 2 வாரங்களுக்கு இந்த நடைமுறை அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
குறைந்தளவான பணிக்குழாமினரை சேவைக்கு அழைக்கும் போது, சுழற்சி முறை மற்றும் வேறு ஏதேனும் பொறிமுறைமையை பின்பற்ற முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டாய சேவைக்கு அழைக்கப்படுகின்ற நாட்களில் சேவைக்கு சமூகமளிக்காத பணியாளர்களது பணிநாள் தனிப்பட்ட விடுமுறையில் கழிக்கப்படும்.
அதேநேரம், அனைத்து பணியாளர்களும் இணையவழியில் தொழிலாற்றுவதற்கு எந்நேரமும் தயாராக இருக்க வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.